அரசு கலைக் கல்லுாரியில் தீ தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி.!

81பார்த்தது
அரசு கலைக் கல்லுாரியில் தீ தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி.!
பரமக்குடி அரசு கலைக் கல்லுாரியில் தீ தடுப்பு குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு மற்றும் பயிற்சி அளிக்கப்பட்டது.

பரமக்குடி சப்-கலெக்டர் அபிலாஷா கவுர் தலைமை வகித்தார். தாசில்தார் சாந்தி முன்னிலை வகித்தார். முதல்வர் சிவக்குமார் வரவேற்றார். தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய அலுவலர் குணசேகரன் தலைமையில் தீயணைப்பு வீர்கள் உமையசாமி, சிவகுமார், தங்கபாண்டியன், விஷ்ணுபிரசாத் பிற்சியளித்தனர்.

அப்போது வீடுகள் மற்றும் பொது இடங்களில் தீ விபத்து ஏற்பட்டால் அவற்றை எவ்வாறு சுலபமாக அழைப்பது என செயல் விளக்கம் அளித்தனர். வீட்டு உபயோக சிலிண்டர்களில் தீப்பிடித்தால் அவற்றை அணைக்கும் வழிமுறைகள் குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர். உடற்கல்வி இயக்குனர் பிரசாத் நன்றி கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி