டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா. மாயகுளம் கிராமத்தில் விசிக எம்எல்ஏ அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை:
டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள மாயக்குளம் கிராமத்தில் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அங்கு வருகை தந்த விசிக மாநில துணைப் பொதுச் செயலாளர், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ். எஸ். பாலாஜி அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னதாக அங்கு விசிக கட்சி கொடி ஏற்றிய பின் வீரவணக்கம் கோஷமிட்டனர். இந்த நிகழ்ச்சியில் ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் அற்புதகுமார், மேற்கு மாவட்ட செயலாளர் ரமே. பிரபாகரன், மண்டல துணைச் செயலாளர் விடுதலை சேகரன் , ஊடக மையம் மாநிலச் செயலாளர் சஜன்பராஜ், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.