ராமநாதபுரம் மாவட்டம் , நயினார் கோவில் ஊராட்சி ஒன்றியம் , நயினார் கோவில் ஊராட்சி ஸ்ரீ மருதவணம் மகா காளியம்மன் கோவில் அருகில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பக்தர்கள் உணவு அருந்தும் கூடத்தை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணை தலைவரும், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான கே. நவாஸ்கனி எம்பி திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில், திராவிட முன்னேற்றக் கழக தீர்மானக்குழு துணை தலைவர் திவாகரன் , திமுக ஒன்றிய செயலாளர் சக்தி, நயினார் கோவில் ஒன்றிய பெருந்தலைவர் வினிதா குப்புசாமி , வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருநாவுக்கரசு , முத்துராமலிங்கம், ஊராட்சி மன்ற தலைவர் ஜோதி மணி , காச்சாணி ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜன் , கீழ காவனூர் ஊராட்சி மன்ற தலைவர் பெரியாழ் , பொறியாளர்கள் திலகவதி , ஜெயந்தி , ஒன்றிய கவுன்சிலர்கள் மணிவண்ணன் , மணி சேகர் , சாயல்குடி வட்டார காங்கிரஸ் தலைவர் அப்துல் சத்தார், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைச் செயலாளர் அப்துல் ஜப்பார் , மாவட்ட தலைவர் வருசை முகம்மது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.