திருவாடானை பெரிய கோவில் வைகாசி விசாக திருவிழா தீர்த்த வாரியுடன் வைகாசி விசாக உற்சவம் நிறைவு பெற்றது
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் வரலாற்றுச் சிறப்புடன் கம்பீரமாக ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு சிநேகவல்லி அம்பாள் உடனமர் அருள்மிகு ஆதிரெத்தினேஸ்வரர் சிவன் கோயில் வைகாசி விசாகப் பெருவிழா மே 31ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்றது.
கடந்த 10 நாட்களாக அருள்மிகு ஆதிரெத்தினேஸ்வரர் பிரியாவிடையுடன், பஞ்சமூர்த்திகள் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்கள். அதனை தொடர்ந்து ஒன்பதாம் நாள் திருவிழாவாக தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிலையில் இன்று தீர்த்தவாரி உற்சவத்துடன் விழா நிறைவு பெற்றது இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டார்கள்