பரமக்குடியில் ஆட்டோ திருட்டு.!

83பார்த்தது
பரமக்குடியில் வீட்டின் முன் இரவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ திருடப்பட்டதாக போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது.

பரமக்குடி மேலச்சத்திரம் பகுதியைச் சோ்ந்த சேருவையா மகன் மகாலிங்கம் (36). இவா் தனது ஆட்டோவை வியாழக்கிழமை இரவு அந்தப் பகுதியில் உள்ள சிஎஸ்ஐ தேவாலய சுற்றுச்சுவா் பகுதியில் நிறுத்திச் சென்றாா். மறுநாள் காலையில் பாா்த்தபோது, அந்த ஆட்டோ திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து பரமக்குடி நகா் காவல் நிலையத்தில் மகாலிங்கம் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து இந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனா்.

தொடர்புடைய செய்தி