ஜாதி வாரி கணக்கெடுப்பு, நீட்தேர்வு ரத்தை வலியுறுத்தி ஆதித்தமிழர் பேரவை சார்பில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் புவனேஸ்வரன் தலைமை வகித்தார். மாநில துணைப் பொதுச் செயலாளர் கார்த்திக், தகவல் தொழில் நுட்பப் பிரிவு மாநில துணைச் செயலாளர் அருண் அதியன் உள்ளிட்டோர் பேசினர். ம. ஜ. க. , மாவட்டச் செயலாளர் செய்யது இப்ராஹிம், மக்கள் விடுதலை கட்சி நிர்வாகி வையமுத்து, ச. ம. க. , மாவட்டத்தலைவர் வேல்முருகன் உட்பட பலர் பங்கேற்றனர். ராமேஸ்வரம் நகர் தலைவர் சுப்பிரமணி நன்றி கூறினார்.