கமுதியில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி.!

53பார்த்தது
கமுதியில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி.!
கமுதியில் மின்சாரம் தாக்கி இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிந்தார்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி முத்துமாரியம்மன் நகரைச் சேர்ந்தவர் பாஸ்கரன் மகன் மனோஜ்குமார்(34). இவரது நன்பர் குருசாமி மகன் செல்வகுமார்(28). இவர் பேருந்து நிலையம் அருகே உள்ள பழக்கடையில் தொழியாளியாக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் இருவரும் காலை மருதுபாண்டியர் சிலைக்கு அருகே உள்ள டீக்கடைக்கு சென்ற போது, டீக்கடையை ஒட்டி முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சாஎன்ற வெள்ளைச்சாமி தேவரின் நினைவு அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பிளக்ஸ் பேனரை அங்கிருந்தவர்கள் அகற்றித் தருமாறு கூறியுள்ளனர். இருவரும் அந்த பேனரை அகற்ற முயன்ற போது பேனர் கம்பி அருகில் இருந்த மின்மாற்றியில் உரசி இருவரும் தூக்கி வீசப்பட்டனர். மனோஜ்குமார் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். செல்வக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இறந்த செல்வக்குமாருக்கு மீனா என்ற மனைவியும், 2 வயதில் பெண் குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து செல்வக்குமாரின் தந்தை குருசாமி அளித்த புகாரின் பேரில் கமுதி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி