கமுதி அருகே வண்ணாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் குடிநீர், மின்சாரம், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும். தவறும் பட்சத்தில் ரேஷன் கார்டு, ஆதார் கார்டுகளை அதிகாரியிடம் ஒப்படைக்கப்படும் என்றனர்.