ஏர்வாடியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு: ஊராட்சி அலுவலகம் முற்றுகை.!

173பார்த்தது
ஏர்வாடியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு: ஊராட்சி அலுவலகம் முற்றுகை.!
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா ஏர்வாடி பகுதியில் நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை களைய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காலி குடங்களுடன் பெண்கள் உள்ளிட்டோர் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். மார்க்சிஸ்ட் தாலுகா குழு உறுப்பினர் நம்புராஜன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முத்துராமு, மயில்வாகனன், தாலுகா செயலாளர் அம்ஜத்கான், பச்சமால், முருகேசன், ராமசாமி உள்ளிட்டோரிடம் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். ஏர்வாடி ஊராட்சி முழுவதும் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், ஏர்வாடியில் புதிய ரேஷன் கடை கட்டடம் கட்டித் தர வேண்டும், குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை சீரமைத்து தர வேண்டும், ஏர்வாடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நியமிக்கப்பட்ட 5 டாக்டர், செவிலியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலை வழங்க வேண்டும், அரசு நிர்ணயித்த தினக்கூலியை நிலுவையின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஏர்வாடி ஊராட்சிக்குட்பட்ட ஒவ்வொரு கிராமத்திற்கும் காவிரி குடிநீர் கிடைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். லாரிகள் மூலம் குடிநீர் உடனடியாக வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததால் முற்றுகை போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி