மாணவர்களின் நலன் கருதி பஸ் இயக்க கிராம மக்கள் கோரிக்கை.!

52பார்த்தது
மாணவர்களின் நலன் கருதி பஸ் இயக்க கிராம மக்கள் கோரிக்கை.!
முதுகுளத்துார் அருகே சடையனேரி கிராமத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்களின் நலன் கருதி அரசு பஸ் இயக்குமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

சடையனேரி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு விவசாயம், கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. கிராமத்திற்கு பஸ் வசதி இல்லை. இதனால் 2 கி. மீ. , நடந்து சடையனேரி ரோட்டில் காத்திருந்து பஸ்சில் செல்கின்றனர்.

பள்ளி, கல்லுாரி மற்றும் அத்தியாவசிய வேலைக்கு செல்லும் கிராம மக்கள் முதுகுளத்துார், சிக்கல் செல்கின்றனர். இதனால் தினந்தோறும் கூடுதல் பணம் செலவு செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாணவர்களின் நலன் கருதி அரசு பஸ் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதனை வலியுறுத்தி முதுகுளத்துார் அரசு போக்குவரத்து பணிமனையில் கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் அதிகாரியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி