பயிர் இன்சூரன்ஸ் அடங்கல் சான்று பெற விவசாயிகளிடம் தலா ரூ. 200 கட்டாய வசூல் வேட்டை பெண் கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் வாங்கும் வீடியோ ஆடியோ காட்சி வைரல்:
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே நீராவி கரிசல்குளம் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட விவசாயிகள் நடப்பாண்டு மானாவாரி பயிர்களாக நெல், மிளகாய், உளுந்து , சோளம், மக்காச்சோளம் , வெங்காயம் உள்ளிட்ட பயிர் வகைகளை தங்களது விளை நிலங்களில் நடவு செய்துள்ள நிலையில் நடப்பாண்டு தற்போது இப்பயிர்களுக்காக வறட்சி, வெள்ள நிவராணம் உள்ளிட்ட பயிர் பாதுகாப்பிற்காக தாங்கள் பகுதிகளில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்களிடம் பயிர் காப்பீடு இன்சூரன்ஸ் தொகையை இழப்பீடாக பெற அதற்கான அடங்கல் சான்று பெற்று ஆன்லைன் மூலமாக பதிவு செய்து வருகின்றர்.
நீராவி கரிசல்குளம் வருவாய் கிராம நிர்வாக அலுவலர் ஸ்ரீ தேவி ஒவ்வொரு விவசாயிகளிடம் அடங்கல் சான்று பெற தல ரூ. 200 ரூபாய் விவசாயிகளிடம் கேட்டுப் பெரும் ஆடியோ உடன் வீடியோ காட்சியை அப்பகுதி விவசாயிகள் தங்களது செல்போன்களில் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோ காட்சி வைரல் ஆகி வருகிறது