கமுதி அருகே ஸ்ரீ முத்தாலம்மன் கோயில் வைகாசி பொங்கல் உற்சவ விழாவை முன்னிட்டு ஆண்கள், பெண்கள், சிறுமிகள் என 200க்கும் மேற்பட்டோர் முளைப்பாரி எடுத்து ஊர்வலம்:
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள
நீ. கரிசல்குளம் கிராமத்தில் அருள் பாலித்து கொண்டிருக்கும் ஸ்ரீ முத்தாலம்மன், ஸ்ரீ காளியம்மன் கோயில் வைகாசி பொங்கல் உற்சவம் விழா கடந்த வாரம் காப்பு கட்டுடன் தொடங்கியது.
தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், ஆராதனை நடைபெற்ற வந்தன.
விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று விவசாயம் செழிக்கவும், பருவ மழை பெய்ய வேண்டியும் அந்த கிராமத்தை சேர்ந்த சிறுமிகள், பெண்கள், ஆண்கள் என 200க்கும் மேற்பட்டோர் முளைப்பாரி தலையில் சுமந்து கிராமத்தில் உள்ள முக்கிய தெருக்கள் வழியாக ஊர்வலமாக வந்து அங்குள்ள கண்மாயில் கரைத்து வழிபட்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை நீராவி கரிசல்குளம் தெற்கு தெருவை சேர்ந்த கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்