மத்திய இணை அமைச்சர் ஆய்வு

59பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டத்தில் முன்னேற விளையும் மாவட்டம் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மத்திய இணை அமைச்சர் ஆய்வு:

மத்திய அரசின் நிதி அயோக் அமைப்பின் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட முன்னேற விளையும் மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அலுவலகத்தில் ரூபாய் 75 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் விதை சுத்திகரிப்பு நிலைய கட்டிட கட்டுமான பணிகளை மத்திய கனரக தொழில்துறை இணை அமைச்சர் பூபதி ராஜு சீனிவாச வர்மா வேளாண்மை துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அதிகாரிகள் அங்கு நடைபெற்று வரும் பணிகள் குறித்து அமைச்சரிடம் விளக்கினர்.

மேலும் கட்டுமான பணிகளின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்து பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


இந்நிகழ்வில் பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாஷா கவுர் மற்றும் வேளாண்மைத் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி