முதுகுளத்தூர்: 08-10-23 ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே சித்திரங்குடி கிராமத்தில் அமைந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ விநாயகர் பேராயிர மூர்த்தி அய்யனார் உலகநாயகி அம்மன் ஆஞ்சநேயர் ஊர் கால சுவாமி ஆலய 48 ஆம் நாள் மண்டல பூஜை விழா நடைபெற்றது.
முன்னதாக ஆலய வளாகத்தில் யாகசாலை பூஜை கணபதி ஹோமம் கோமாதா பூஜை பூர்ணா குதி தீபாதாரணை நடைபெற்று சிவாச்சாரியார் வேத மந்திர இசை வாத்தியங்களுடன் கும்பம் புறப்பாடு ஆலயம் வலம் சென்று சுவாமிகளுக்கு கும்ப நீர் பால் தயிர் சந்தன இளநீர் மஞ்சள் விபூதி பஞ்சாமிர்தம் மூலிகை 16 வகையான வாசனை திரவிய அபிஷேக அலங்காரம் தீபாதாரணை நடைபெற்றது.
இதில், சித்திரங்குடி முதுகுளத்தூர் கமுதி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் அனைவருக்கும் பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது.