இயற்கை மூலிகையில்  பொருட்கள் செய்யும் பயிற்சி.

85பார்த்தது
திருவாடானை கல்லூரியில்   இயற்கை மூலிகையில்  பொருட்கள் செய்யும் பயிற்சி.

ராமநாதபுரம்  மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில திட்டக்குழுவின் வளமிகு வட்டாரங்கள் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ், திருவாடனை வட்டாரம்  தேர்ந்தெடுக்கப்பட்டு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி இதன் தொடக்க நிகழ்வு இன்று  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இயற்கை மூலிகையில்  பொருட்கள் செய்யும் பயிற்சி துவங்கி நடைபெற்றது.
     இந்த நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் பழனியப்பன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் அதன் இயக்குநர் அம்பலவாணன் இந்திய அக்கவுண்ட் அன்ட் ஆடிட் சர்வீஸ்  குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். திட்ட மேலாளர்
சண்முகராஜ், திருவாடானை வட்டாச்சியர் ஆண்டி பங்கேற்று பெண்கள் முன்னேற்றம் பற்றி எடுத்துரைத்தனர். மாவட்ட திட்ட மேலாளர் பொன் வேல்முருகன் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார். பயிற்சியில் கலந்து கொண்டவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. பெண்கள் கலந்து கொண்டு பயன்பட்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி