முதுகுளத்துார் கிராமங்களில் பருத்தி விலை குறைவு.!

52பார்த்தது
முதுகுளத்துார் கிராமங்களில் பருத்தி விலை குறைவு.!
முதுகுளத்துார் வட்டார​ கிராமங்களில் மானாவரி பயிராக நெல் விவசாயம் செய்து வந்தனர். இந்த ஆண்டு பருவமழையால்​ தண்ணீரில் முழ்கி நெல் விவசாயம் பாதிக்கப்பட்டது. இதனால் நஷ்டம் ஏற்பட்டது. இதையடுத்து 4 மாதத்திற்கு முன்பு நிலத்தை உழவு செய்து நெல் விவசாயத்திற்கு அடுத்தபடியாக பருத்தி விவசாயத்தில் ஆர்வம் காட்டினர்.

முதுகுளத்துார் வட்டாரம் தேரிருவேலி, கொடுமலுார், வெண்ணீர் வாய்க்கால், விளங்குளத்துார், கீரனுார், மேலச்சிறுபோது, இளஞ்செம்பூர் உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் 2000 ஏக்கருக்கு அதிகமாக பருத்தி விவசாயம் செய்துள்ளனர்.

பருத்தி விவசாயத்திற்கு தண்ணீர் குறைந்த அளவு போதுமானதால் விவசாயிகள் போர்வெல், கண்மாய், ஊருணி தண்ணீரை பாய்ச்சி வந்தனர். முதுகுளத்துார் வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

பருத்தி செடிகள் நன்கு வளர்ந்து காய்கள் காய்த்து இருந்த நிலையில் தற்போது பெய்த மழையால் வீணாகியது. ஒரு சிலர் கூலி ஆட்கள் வைத்து பருத்தி எடுத்த நிலையில் கடந்த வாரம் கிலோ ரூ. 55க்கு விற்ற நிலையில் தற்போது பெய்த மழையால் ரூ. 40 முதல் 45க்கு விலை குறைந்துள்ளது.

இதனால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். மழையால் நெல் விவசாயம் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது பருத்தி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி