ஸ்ரீகாளியம்மன் ஸ்ரீ கருப்பண சாமி கோவில்மகா கும்பாபிஷேகவிழா

85பார்த்தது
கமுதி அருகே ஸ்ரீகாளியம்மன், ஸ்ரீ கருப்பண சாமி கோவில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே காடமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீகருப்பண சுவாமி ஆலய நூதன அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக பெருவிழா விமர்சையாக நடைபெற்றது.

முன்னதாக மங்கள இசையுடன் , மகா கணபதி ஹோமத்துடன் நேற்று முன்தினம் தொடங்கியது.

இன்று நான்காம் கால பூஜை, கோமாதா பூஜை, சுமங்கலி பூஜை, மகா பூரணாகுதி தீபாதாரணை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மங்கல இசை வாத்தியங்களுடன் சிவாச்சாரியார் வேத மந்திரங்கள் முழங்க யாக வேள்வியிலிருந்து கடம் புறப்பாடு ஆலயம் சுற்றி வலம் சென்று ஸ்ரீகாளியம்மன், ஸ்ரீ கருப்பணசுவாமி ஆலய விமான கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் புனித நீர் தெளிக்கப்பட்டது. மூலவர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம், தீபாதாரணை நடைபெற்றது.

இதில் காடமங்கலம், பெருநாழி, கமுதி , மதுரை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள்கும்பாபிஷேக விழாவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி