கமுதி அருகே ஸ்ரீசந்தனமாரியம்மன் கோயில் வருடாந்திர வைகாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள ராமசாமிபட்டி ஊராட்சிக்கு உள்பட்ட அய்யனார்குளம் ஸ்ரீசந்தனமாரியம்மன் கோயில் வருடாந்திர வைகாசி பொங்கல் உற்சவ விழா கடந்த மே 21 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. இவ்விழாவை முன்னிட்டு அம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாதாரணை நடைபெற்றது. இந்நிலையில் இரவு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இதில் பெண்கள் அம்மன் போற்றி பாடல்கள் பாடி திருவிளக்கிற்கு பூ தூவி சிறப்பு பூஜை செய்தனர். இதநை தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாதாரணை நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை அய்யனார்புரம் கிராம பொதுமக்கள், இளைஞர்கள் செய்தனர்.