ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மதுரை சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஆதி வராஹி அம்மன் ஆலயத்தில் கார்த்திகை மாத வளர்பிறை பஞ்சமி திதி தினத்தை முன்னிட்டு ஆதி வராஹி அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், இளநீர், குங்குமம், உள்ளிட்ட 16 வகையான மூலிகை திரவிய அபிஷேகம், மோட்ச தீபங்கள் அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
இதில் பங்கேற்ற பெண்கள் வராஹி அம்மனுக்கு முன்பாக வாழை இலையில் பச்சரிசி படையல் இட்டு தேங்காய் உடைத்து நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அம்மனுக்கு அபிஷேகம் செய்த மஞ்சள், சந்தனம் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதில் கமுதி, கோட்டைமேடு, கண்ணார்பட்டி உள்ளிட்ட கமுதி சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர்.