விவசாயிகளுக்கு இயந்திரகளின் மூலம் விதைப்புப் பயிற்சி.!

84பார்த்தது
விவசாயிகளுக்கு இயந்திரகளின் மூலம் விதைப்புப் பயிற்சி.!
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த பெரியமனக்குளத்தில் விவசாயி சையது இப்ராஹீமுக்கு சொந்தமான நிலத்தில் வேளாண்மைத் துறை அட்மா திட்டத்தின் கீழ் இயந்திரங்கள் மூலம் விதைத்தல் குறித்த செயல்விளக்க பயிற்சி விவசாயிகளுக்கு நடத்தப்பட்டது. அப்போது வேளாண்மை இணை இயக்குநா் கண்ணையா கூறியதாவது:

நெல் சாகுபடியில் தன்னிறைவு பெற்றுள்ளோம். பயறு, எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் பற்றாக்குறை நிலவுவதால், வெளிநாடுகளில் இருந்து பயறு மற்றும் எண்ணெய் இறக்குமதி செய்யும் நிலையில் உள்ளோம். அதனால், உள்நாட்டில் சிறுதானிய உற்பத்தியைப் பெருக்க வேண்டும். எனவே, விவசாயிகள் கோடையில் நிலக்கடலை, எள், பயிறு வகைகள் சாகுபடியை அதிகரிக்க வேண்டும் என்றாா் அவா். பின்னா், சின்ன மனக்குளம், முஸ்டக்குறிச்சி, உப்பங்குளம், பாக்குவெட்டி, கருங்குளம், நாராயணபுரம், நகரத்தாா்குறிச்சி, வல்லந்தை, டி. புனவாசல், நத்தம், அச்சங்குளம் உள்ளிட்ட கிராமங்களில் செயல்படுத்தப்பட்ட அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் அமைக்கப்பட்ட தரிசு நிலத் தொகுப்புகளில் ஆழ்துளை கிணறு, மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டதை ஆய்வு செய்தாா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி