பதிவில்லாத மறுவாழ்வு இல்லங்களுக்கு சீல் ஆட்சியர் எச்சரிக்கை
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள், முதியோர், மனவளர்ச்சி குன்றியோர், மன நலம் பாதித்தோர், பெண்கள், குழந்தைகளுக்கான விடுதிகள், மாற்றுத்திறனாளிகள், போதை பொருட்களுக்கு அடிமையானோருக்கான மறுவாழ்வு இல்லங்கள் பதிவு, உரிமம் பெற இணைய தளம் PORTAL, அலுவலகம் மூலம் 1 மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும். தவறினால் இவ்வில்லங்களுக்கு சீல் வைக்கப்படும் என ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்