போக்குவரத்திற்கு சரியில்லாத ரோடு மக்கள் அவதி

73பார்த்தது
பெருநாழி அருகே திம்மநாதபுரம் ஊராட்சிக்குட்பட்ட வீரமாச்சான் பட்டி கிராமத்தில் 3 கி. மீ. , வரை சேதமடைந்த சாலையால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்
வீரமாச்சான் பட்டி கிராமத்தில் 2000க்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். மாவிலங்கை, பம்மனேந்தல், வேப்பங்குளம் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லக்கூடிய பிரதான சாலையாக வீரமாச்சான் பட்டி கிராமம் உள்ளது. இங்கு சாலை அமைத்து 15 ஆண்டுகள் ஆகிறது. தொடர் பராமரிப்பு இன்றி சாலை சேறும், சகதியுமாக குண்டும் குழியுமாக இருப்பதால் சமீபத்தில் பெய்த மழையாலும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீராலும் இச்சாலை போக்குவரத்திற்கு சரியில்லாத நிலையில் உள்ளது.


எனவே கமுதி யூனியன் நிர்வாகத்தினர் புதிய சாலை அமைக்கவும், சுகாதார பணிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி