வட்டார வளர்ச்சி அலுவலர்: லஞ்ச ஒழிப்பு போலீசாரல் கைது

50பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள புளியங்குடி கிராமத்தில் அருந்ததியர் காலணியில் 7. 50 லட்சம் மதிப்பீட்டில் நாடக மேடை அமைக்கும் பணி நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் ஏற்கனவே 3. 50 லட்சம் விடுவிடுவிக்கப்பட்டது. அந்த வேலை முழுவதும் முடிந்த நிலையில் அதற்கான மீதித்தொகை 4. 20 லட்சம் ஐ பெறுவதற்காக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பால்பாண்டியை ஒப்பந்ததாரர்கள் அணுகி உள்ளனர்.

அதற்கு தனக்கும் அலுவலக செலவிற்கும் ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.


இந்த சூழ்நிலையில் லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த ஒப்பந்ததாரர்கள் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஐந்தாயிரம் ரூபாய் பணம் பெற்ற துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பால்பாண்டியை கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

பின்பு அவரிடம் நடத்திய விசாரணையில் ஒப்பந்ததாரர்களிடம் ஐந்தாயிரம் ரூபாய் பணம் பெற்றது தெரியவந்த நிலையில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பால்பாண்டியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

குறிப்பு: லஞ்சம் கொடுத்த ஒப்பந்ததாரர்கள் தங்களுடைய பெயர் மற்றும் அடையாளத்தை வெளியிட வேண்டாம் என லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கூறியதின் அடிப்படையில் அவர்களது பெயர் அடையாளம் ஏதும் வெளியிடப்படவில்லை. நன்றி)

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி