அரசு விழாவில் பொதுமக்கள் அவதி.!

80பார்த்தது
அரசு விழாவிற்கு தாமதமாக வந்த அமைச்சரால் வயதான பெண்களும் குழந்தைகளும் பசி மயக்கத்தால் மிகவும் அவதி அடைந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாரியூர் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் திறந்து வைப்பதாக அறிவிக்கப்பட்டது.

மேலும் புதிய கட்டிட திறப்பு விழா 12 மணி அளவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், காலை 10 மணி முதல் குழந்தைகளுடன் அழைத்துவரப்பட்ட பெண்கள் மற்றும் வயதான பெண்கள் அனைவரும் இருக்கையில் அமர வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் மிகவும் தாமதமாக மாலை 3 மணிக்கு வருகை தந்ததால் வயதான பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் வந்திருந்த தாய்மார்கள் அனைவரும் பசி மயக்கத்தில் சோர்ந்து போயினர்.

அதனை தொடர்ந்து பசி மயக்கத்தில் இருந்த பெண்கள் சிலரோ முணுமுணுத்த படி தண்ணீரை பருகி தங்களது பசியை போக்கிக் கொண்டனர்.

மேலும் பொறுத்து பொறுத்து பார்த்த பெண்கள் சிலரோ நிகழ்ச்சி நடைபெறும் பந்தலில் இருந்து புறப்பட்டு சென்றதால் இருக்கைகள் பாதி காலியானது. பின்னர் காலி சேர்களை பார்த்த அமைச்சர் சில நிமிடங்கள் பேசிவிட்டு புறப்பட்டுச் சென்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி