ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் நடந்த
கிரிக்கெட் இறுதி போட்டியில் வென்ற அணிகளுக்கு ஸ்டூடண்ட் டாட் காம் நிறுவனம் சார்பில் பரிசளிப்பு விழா நடந்தது. போட்டியில்வென்ற அணிக்கு பரிசு கோப்பையும் வீரர்களுக்கு பதக்கம், தனி நபர் சாதனைக்காக விருது வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற அணிக்கு உலகக் கோப்பை
கிரிக்கெட் போட்டியை நேரில் காண டிக்கெட் வழங்கப்பட்டது.
மாநில ஹஜ் கமிட்டி உறுப்பினரும், ராமநாதபுரம் நகராட்சி உறுப்பினரும்,
திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி ராமநாதபுரம் மாவட்டஅமைப்பாளருமான ஜவா (எ) ஜஹாங்கீர், ஸ்டூடண்ட் டாட் காம் நிறுவனர் சாலிஹ் ரஹ்மான், ஏர்பாத் கபே நிறுவனர் பாதுஷா உள்ளிட்டோர் பங்கேற்று பரிசு வழங்கினர்.