முதுகுளத்தூர் பேரூராட்சி பகுதியில் வாரச்சந்தை ஏலம் எடுப்பது தொடர்பாக இரு தரப்பினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில், மோதலில் ஈடுபட்ட இரு தரப்பைச் சேர்ந்த சுமார் 50 க்கும் மேற்பட்டோர் மீது முதுகுளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பேரூராட்சியில் உள்ள அலுவலக வீடியோவும் ஆய்வு செய்யப்பட உள்ளது.