நீதிமன்றத்தில் மரக்கன்று நடுதல்.!

70பார்த்தது
நீதிமன்றத்தில் மரக்கன்று நடுதல்.!
முதுகுளத்துார் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உலக சுற்றுச்சூழல்​ தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடுதல் நிகழ்ச்சி நடந்தது. வழக்கறிஞர் சங்க தலைவர் ராஜசேகர் தலைமை வகித்தார்.

நீதிமன்ற வளாகம் சுத்தம் செய்யப்பட்டிருந்த இடத்தில் நீதிபதிகள் ராஜகுமார், அருண்சங்கர் ஆகியோர் 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனர். நீதிபதி ராஜகுமார் கூறியதாவது:

மரக்கன்றுகள் நட்டு பாதுகாத்து வந்தால் பூமி வெப்பமடைவதை தவிர்க்கலாம். நாம் ஒவ்வொருவரும் ஒருமரம் வைத்து தண்ணீர் ஊற்றி வளர்க்க வேண்டும்.

அதே போல் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்த்து வீட்டிலிருக்கும் துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என்றார்.

வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

ஏற்பாடுகளை வட்ட சட்டப் பணிகள் குழு சட்டத் தன்னார்வலர் அடைக்கலமேரி செய்தார்.

தொடர்புடைய செய்தி