ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியகுளம் ஊராட்சி பசும்பொன்னார் நகரில் காவிரி கூட்டு குடிநீர் வரவில்லை என மூதாட்டி ஒருவர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே கடலாடி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ( காவிரி திட்டம்) துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது