1914 ஆம் ஆண்டு மண்டபம் ராமேஸ்வரம் கடல் பகுதியை இணைக்க கூடிய பழைய பாலம் கடந்த நூற்றாண்டுக்கு மேல் செயல்பட்டு வந்தது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக மண்டபம் ராமேஸ்வரம் பகுதிக்கு ரயில் சேவை நிறுத்தப்பட்டு, சுமார் 530 கோடி செலவில் புதிய ரயில் பாலம் கட்டுமான பணிகள் துவங்கி நிறைவடைந்த நிலையில், அதன் தூண்கள் மற்றும் பாலத்தின் உறுதித்தன்மையை ரயில்வே முதன்மை பாதுகாப்பு அதிகாரி சவுத்ரி நேற்று (நவம்பர் 14) ஆய்வு செய்தார். பின்னர் இரண்டாவது நாளாக தானியங்கி தூக்குப் பாலத்தை ஆய்வு செய்தார். பின்னர் அதிவேக ரயில் பாலத்தில் சோதனை ஓட்டம் செய்து இறுதிக்கட்ட ஆய்வு பணியை மேற்கொண்டார். மேலும் இந்த ஆய்வுக்குப் பிறகு ரயில் சேவை எப்போது துவங்கும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.