ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி மத்திய ஒன்றிய கழகம் சார்பில் 23 கிளைக் கழகத்தில் உள்ள அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் விழா பேருந்து நிலையம் அருகே உள்ள திருமண மஹாலில் ராமநாதபுரம் மாவட்டக் கழக செயலாளர் எம். ஏ. முனியசாமி தலைமையிலும், சாயல்குடி மத்திய ஒன்றிய செயலாளர் தனிச்சியம் ராஜேந்திரன் முன்னிலையிலும் நடைபெற்றது.
இதில் புதிய வடிவத்தில் உருவாக்கப்பட்ட உறுப்பினர் அடையாள அட்டையை 23 கிளைகளுக்கு உட்பட்ட
செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது.
இதில் கலந்துகொண்ட மாவட்ட கழக செயலாளர் எம். ஏ. முனியசாமி பேசுகையில்: கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்கள்
கட்சியில் இளைஞர்களை சேர்க்க மூத்த நிர்வாகிகள் முன் வர வேண்டும் என அறிவுரை வழங்கி உள்ளதாகவும், அதன்படி கட்சி நிர்வாகிகள் செயல்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிறைகுளத்தான், கடலாடி யூனியன் சேர்மன் முனியசாமி பாண்டியன், முதுகுளத்தூர் மத்திய ஒன்றிய கழக செயலாளர் எஸ். டி. செந்தில்குமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.