மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மறியல்: 24 பேர் கைது.!

62பார்த்தது
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மறியல்: 24 பேர் கைது.!
கமுதியில் மத்திய அரசின் பாரபட்சமான பட்ஜெட் தாக்கலை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் ஈடுபட்ட 24 பேர் கைது செய்யப்பட்டனர்.

மத்திய அரசின் பாரபட்சமான பட்ஜெட்டை கண்டித்து கமுதியில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கமுதி தாலுகா செயலாளர் கண்ணதாசன் தலைமை தாங்கினார். பெருமாள் கோயிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, கமுதி பாரத ஸ்டேட் வங்கி முன்பு மறியலில் ஈடுபட்டனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய தாலுகா செயலாளர் வி. முருகன், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் குருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தாலுகா செயலாளர் முனியசாமி மறியல் போராட்டத்தின் நோக்கம் குறித்து விரிவாக பேசினார்.

தமிழகத்திற்கு முறையாக நிதி ஒதுக்காத மத்திய அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பபட்டது. இந்த போராட்டத்தில் 24 பேர் கலந்து கொண்டனர். அனைவரும் கைது செய்யப்பட்டு, தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். பின்னர் மாலை விடுவிக்கப்பட்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி