மின்கட்டன உயர்வைக் கண்டித்து அபிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்துள்ள அபிராமத்தில் தமிழக அரசின் மின் கட்டண உயர்வைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் கிளை செயலாளர் வீரையா தலைமையில், கமுதி தாலுகா குழு உறுப்பினர் கண்ணதாசன் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாநில செயற்குழு உறுப்பினர் கே. ஜி. பாஸ்கரன் சிறப்புரையாற்றினார். இந்தப் ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மாவட்ட குழு உறுப்பினர் முத்துவிஜயன், தாலுகா செயலாளர் முனியசாமி, தாலுகா குழு உறுப்பினர்கள் பொண்ணுச்சாமி, சம்பத், முனியசாமி உள்பட 30 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.