கமுதி மத்திய ஒன்றிய கழக திமுக சார்பில் மாரத்தான் ஓட்டப்பந்தயம் இன்று நடைபெற்றது. மாரத்தான் போட்டியை ஒன்றிய கழக செயலாளர் சண்முகநாதன் தொடங்கி வைத்தார். இதில் ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். பங்கேற்ற இளைஞர்கள் அனைவருக்கும் போட்டி தேர்வுக்கு பயனுள்ள புத்தகங்கள் வழங்கப்பட்டன.