எம். பி. , யிடம் விவசாய சங்கம் கோரிக்கை மனு.!

70பார்த்தது
எம். பி. , யிடம் விவசாய சங்கம் கோரிக்கை மனு.!
தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் சார்பில் முதுகுளத்துாரில் எம். பி. , தர்மரிடம் சங்க ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம் தலைமையில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு அனைத்து விவசாய பயிர்களையும் எம். எஸ். பி. , விலையில் வாங்குவதற்கு உத்தரவாதம் அளிக்க சட்டம் இயற்றப்பட வேண்டும். விவசாய கடனில் இருந்து விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களை முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும். 60 வயது பூர்த்தி அடைந்த விவசாயிகள், விவசாய தொழிலாளருக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தில் திருத்தம் செய்து பிரீமியத்தை அரசே செலுத்த வேண்டும். மின்சார தீருத்த மசோதா 2020 ரத்து செய்யப்பட வேண்டும். மிளகாய், மஞ்சள் பிற மசாலா பொருட்களுக்கான தேசிய ஆணையம் அமைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட 15 கோரிக்கைகள் அடங்கியுள்ளது.

விவசாயிகளின் நலன் கருதி எம். பி. , பார்லிமென்டில் இதுகுறித்து பேச வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இயற்கை விவசாயி ராமர், அபிராமம் விவசாய சங்க தலைவர் போத்திராஜா, மணலுார் நீர்ப் பாசன குழு தலைவர் கோவிந்தன், பசும்பொன் ராமமூர்த்தி, உட்பட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி