புதர்மண்டி காணப்படும் கீழக்குளம்-நல்லாங்குளம் சாலை.!

85பார்த்தது
புதர்மண்டி காணப்படும் கீழக்குளம்-நல்லாங்குளம் சாலை.!
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்துள்ள கீழக்குளம் கிராம சாலை சேதமடைந்து, மோசமா இருப்பதாலும், சாலையின் இருபுறமும் கருவேல மரங்கள் வளர்ந்து, புதர் மண்டி காணப்படுவதால், அவ்வழியாக செல்லும் வாகனங்கள் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட முடியாமலும், இரவு நேரங்களில் பொதுமக்கள் செல்லவும் அச்சப்படுகின்றனர். மேலும் இந்த சாலை சேதத்தால், முதுகுளத்தூர் }அபிராமம் வழித்தடத்தில் கீழக்குளம், செல்வநாயகபுரம், ஆணைசேரி, நல்லாங்குளம், சிறுகுடி பெருங்கருணை, விக்கிராண்டிபுரம், கீழக்கொடுமலூர், மேலக்கொடுமலூர் வழியக காலை, 7 மணி, நன்பகல் 1. 15 க்கும் இயக்கப்படும் 13 எண் நகரப் பேருந்து, மற்றும் இதே வழித்தடத்தில் கமுதியிலிருந்து முதுகுளத்தூருக்கு இயக்கப்படும் 6 ஆம் எண் நகரப்பேருந்து ஆகியன தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் வரும் ஜூன் 10 ஆம் தேதி முதல் பள்ளிகள் தொடங்க உள்ளதால் கீழக்குளம்}நல்லாங்குளம் சாலையை சீரமைத்து, சாலையோரம் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்றி அரசு நகர பேருந்துகளை இயக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி