பனை தொழிலாளர் கொண்டாடும் தீவு முனியசாமி கோயில் கொடை விழா.!

686பார்த்தது
சாயல்குடி: 08-10-23

பனை தொழில் மாத நிறைவை போற்றும் வகையில் 100க்கும் மேற்பட்ட கிடாய் சேவல்களை பலியிட்டு சாமிக்கு பட்டை சோறு படையலிட்டு பனை ஓலையில் பட்டைபிடித்து நடந்த கறி விருந்தில்
10 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பங்கேற்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே நரிப்பையூர் - வெள்ளப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள தீவு முனியசாமி கோயில் வருடாந்திர கொடை விழாவை முன்னிட்டு
பனைத் தொழில் கலாச்சார பாரம்பரியத்தை போற்றும் வகையிலும்

பனை தொழில் மாத நிறைவை போற்றும் வகையிலும் 100க்கும் மேற்பட்ட கிடாய் சேவல்களை பலியிட்டு தீவு முனியசாமிக்கு பட்டை சோறு படையலிட்டு பனை ஓலையில் பட்டை பிடித்து நடந்த கறி விருந்தில் பனைத் தொழிலாளர்கள் மீனவ கிராம பொதுமக்கள் உள்ளிட்ட
10 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் விழாவில் பங்கேற்று பனைத் தொழில் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடும் வகையில் தீவு முனியசாமியை தரிசனம் செய்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி