கமுதி கோட்டைமேட்டில் உள்ள வட்டார வள மையத்தில் நடைபெற்ற பயிற்சியில் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கு முதல் பருவத்திற்கான புத்தகம் வழங்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டைமேட்டில் உள்ள வட்டார வள மையத்தில் மேற்பார்வையாளர் ஸ்ரீராம் தலைமையில், இல்லம் தேடிக் கல்வி கமுதி வட்டார ஒருங்கிணைப்பாளர் சி. திருஷ்ணமூர்த்தி முன்னிலையில் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கு முதல் பருவத்திற்கான பயிற்சி நடைபெற்றது. இதில் கமுதி வட்டாரத்தில் உள்ள 69 தன்னர்வலர்கள் கலந்து கொண்டனர்.
கருத்தாளர்களாக ஜெகநாதான், ஆசிரியர் பயிற்றுனர் மற்றும் ஆசிரியர் பொன்மலர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளித்தனார். தன்னார்வலர்களுக்கு இல்லம் தேடிக் கல்வி முதல் பருவத்திற்கான புத்தகம் வழங்கப்பட்டது.