அங்கன்வாடியில் சிறார்களுக்கு பட்டமளிப்பு விழா.!

85பார்த்தது
அங்கன்வாடியில் சிறார்களுக்கு பட்டமளிப்பு விழா.!
கடலாடி அருகே ஆப்பனூர் அங்கன்வாடியில் முன்பருவக் கல்வி (எல்கேஜி, யுகேஜி) முடித்த மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றறது.

சமூக நலன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் இயங்கும் இந்த அங்கன்வாடியில் முன் பருவக் கல்வி முடித்த சிறறார்களுக்கு கடலாடி வட்டார குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் மா. சசிகலா பட்டங்களை வழங்கிப் பேசினார்.

இதேபோல, குருவாடி அங்கன்வாடியில் முன்பருவக் கல்விக்கு புதிய சிறறார்கள் சேர்க்கப்பட்டனர். சிறறார்களுக்கு ஆரத்தி எடுத்தும், பலூன்கள், விளையாட்டுப் பொருள்கள் கொடுத்தும் அங்கன்வாடி பணியாளர்கள் வரவேற்பளித்தனர். நிகழ்வுகளில் வட்டார ஒருங்கிணைப்பாளர் மு. வெள்ளைப்பாண்டியன், சிறறார்களின் பெற்றேறார்கள், மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அங்கன்வாடி பணியாளர்கள் நகோமி, மங்களேஸ்வரி ஆகியோர் செய்தனர்.

தொடர்புடைய செய்தி