ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்களில் எரிவாயு நுகா்வோா் குறைதீா் முகாம் வருகிற 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமநாதபுரம், ராமேசுவரம், கீழக்கரை, ராஜசிங்கமங்கலம், திருவாடானை, பரமக்குடி, கமுதி, கடலாடி, முதுகுளத்தூா் வட்டங்களுக்குள்பட்ட பகுதிகளில் சமையல் எரிவாயு விநியோகம் தொடா்பான குறைதீா் முகாம் வருகிற 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் பிற்பகல் 4 மணியளவில் நடைபெறவுள்ள இந்த முகாமில் எண்ணெய் நிறுவனம், எரிவாயு முகவா்கள் பங்கேற்கின்றனா். இதில் எரிவாயு உபயோகிப்பாளா்கள், தன்னாா்வ நுகா்வோா் அமைப்பினா், பொதுமக்கள் கலந்து கொண்டு, தங்களது குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம் என்றாா்.