மாநில அளவில் இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற கால்பந்து போட்டிகள்

53பார்த்தது
பரமக்குடியில் சிறுவர்களுக்கான மாநில அளவில் இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற கால்பந்து போட்டிகள்: ஆர்வமுடன் பங்கேற்ற வீரர்கள்*.

பரமக்குடியில் நடைபெற்ற சிறுவர்களுக்கான மாநில அளவிலான கால்பந்து போட்டிகளில் வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வில்லேஜ் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் 07 ம் ஆண்டு சிறுவர்களுக்கான மாநில அளவிலான கால்பந்து போட்டிகள் நடைபெற்றது.

இப்போட்டியினை இந்தியன் சூப்பர் லீக் வீரர் மாயக்கண்ணன் துவக்கி வைத்தார்.

இப்போட்டியில் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் என மாநிலம் முழுவதும் இருந்து 12 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 21 அணிகளும், 15 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 19 அணிகளும் கலந்து கொண்டன.

இரண்டு நாட்கள் நடைபெற்ற இப்போட்டிகளில் ஏராளமான வீரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

இறுதியில் பரமக்குடி மற்றும் மதுரை அணிகள் முதல் இரண்டு இடங்களை பிடித்தன.
வெற்றி பெற்ற அணிகளுக்கு மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி பரிசுகளை வழங்கி கொளரவித்தார்.

போட்டிக்கான ஏற்பாடுகளை வில்லேஜ் ஸ்போர்ட்ஸ் அகாடமி நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி