கடல் அரிப்பால் பாதிக்கப்படும் கீழக்கரை மீனவர் குப்பம்.!

68பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மீனவர் குப்ப பகுதி மீனவர்கள் கடல் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவு மற்றும் அலை தடுப்பு சுவர் அமைத்து தர கோரிக்கை வைத்துள்ளனர்.

மன்னார் வளைகுடா பகுதிகளில் அமைந்துள்ள கீழக்கரை கடலோர மக்களின் முக்கியப் பிரச்சனை இந்தப் பகுதியில் ஏற்படும் கடலரிப்பாக உள்ளது. கடலரிப்பு என்பது கடலோர மணல் பகுதிகள் அரிக்கப்பட்டு கடலானது நிலப்பகுதியை நோக்கி விரிவடைவதை கடலரிப்பு என சொல்லப்படுகிறது.


இதன் காரணமாக, கடலோரத்தில் இருக்கும் குடிசைகளில் வாழும் மக்கள் பாதிப்படைவதுடன் அவர்களுடைய இருப்பிடங்கள் முற்றாக அழிந்துவிடுகின்றன. கடலோரத்தில் இருக்கும் கட்டுமானங்களான சாலைகள், மின் கம்பங்கள், கட்டடங்கள் முதலியவை அழிந்து கடலுக்குள் மூழ்கி விடுகின்றன. அத்துடன் கடலோரத்தில் உள்ள தென்னை, பனை தோப்புக்கள் அழிவடைகின்றன.

இவ்வாறு அதிகமான கடலரிப்பின் காரணமாக உப்பு நீர் உட்புகுவதால் நிலத்தடி நீர் உப்புத்தன்மை கொண்டதாக ஆகிறது. இதனால் கடலோர மக்களின் குடிநீர் ஆதாரம் முற்று முழுதாக பாதிப்படைகிறது. கடலரிப்பைக் தடுத்து, மீனவர்களையும் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் காக்க அரசு தூண்டில் வளைவு மற்றும் கடல் அலை தடுப்பு சுவர் அமைத்து தர  நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி