பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா

67பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் செயல்படும் கண்ணா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது

இதில் ஆசிரியைகள் பொங்கல் வைத்து கடவுளுக்கு படையலிட்டு பூஜை செய்து வழிபாடு செய்தனர்.

பின்பு கோலப்போட்டி நடைபெற்றது. தமிழர்களின் பாரம்பரியத்தையும் , ஜல்லிக்கட்டு மற்றும் விவசாயிகளின் உழவு தொழிலையும் பறைசாற்றும் விதமாக கோலப்போட்டி இருந்தது.

பின்பு அனைவருக்கும் பொங்கல் வழங்கி கொண்டாடப்பட்டன.

பள்ளி மாணவர்களுக்கு அவர்களின் திறமையை மேம்படுத்துவதற்காக இன்றைய சூழ்நிலையில் பண்டிகை அவசியமா? அநாவசியமா? என்பது குறித்த தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. இதில் பட்டிமன்ற நடுவராக பட்டிமன்ற பேச்சாளர் துரைப்பாண்டியன் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியின் இறுதியில் பள்ளி ஆசிரியைகள் கும்மி ஆட்டம் ஆடி அசத்தினர். இது பார்ப்போரை மெய்சிலிர்க்க வைத்தது.

பின்பு ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் அனைவரும் தமிழர்களின் திருநாளாம் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி