கமுதியில் காய்கறி வாரச்சந்தைக்குள் மழை நீருடன் கழிவுநீர் புகுந்து காய்கறிகளை இழுத்துச் சென்ற வீடியோ காட்சி*
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் முறையாக கழிவு நீர் தேங்காமல் செல்ல கழிவு நீர் கால்வாய் அமைக்கப்படாததால் வாரச்சந்தை வளாகத்திற்குள் மழைநீர் புகுந்த நிலையில் மழைநீருடன் சாக்கடை கழிவு நீரும் புகுந்து வியாபாரிகள் விற்பனைக்காக அடுக்கி வைத்திருந்த காய்கறிகளை இரவு பெய்த மழையில் மழை நீருடன் கழிவுநீர் கலந்து நீரில் இழுத்துச் சென்றது.
இதனால் காய்கறி வியாபாரிகளுக்கு பெரிய அளவிலான நஷ்டம் ஏற்பட்டதால் கவலை அடைந்துள்ளனர்.
கமுதி பேரூராட்சி நிர்வாகம் வாரச்சந்தை காய்கறி வியாபாரிகள் பொதுமக்களின் நலன் கருதி கழிவு நீர் கால்வாய் மழை நீர் செல்ல முறையாக கால்வாய் அமைக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.