முதுகுளத்தூர் அருகே திமுக அரசின் நான்காண்டு சாதனை பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் திமுகவின் நான்காண்டு சாதனை பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு முதுகுளத்தூர் திமுக மத்திய ஒன்றிய கழக செயலாளர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்துகொண்டு வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அனைவரும் உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் தளபதி தலைமையிலான அரசு மக்களுக்கு நிறைய நன்மைகளை செய்து வருவதாகவும் மகளிர்க்கு இலவச பேருந்து வசதி, மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை உள்ளிட்டவையில் வழங்கப்படுவதாக தெரிவித்தார். மேலும் நல்ல தண்ணீர் தீவை சுற்றுலாத்தலமாக மேம்படுத்துவதற்காக மத்திய அரசிடம் 100 கோடி ரூபாய் கோரப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். தற்பொழுது திமுக கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி இருப்பதால் வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எளிதாக வெற்றி பெற்று விடலாம் என கூறினார். மேலும் வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு மக்களுக்கு சேவை செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்