ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா 'ஆப்பனூர்' ஊராட்சியில் அரசு நடுநிலைப் பள்ளியாக இயங்கி வந்த நிலையில், தற்போது உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. கல்வித் தரமும் வளர்ச்சியடைந்துள்ளது.
தொடர்ந்து அப்பகுதி மக்களின் கோரிக்கை மற்றும் ஊரின் வளர்ச்சி கருதி மேலும், மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பட உள்ள நிலையில், பள்ளிக்கு அருகே உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை பள்ளியின் விளையாட்டு மைதானமாகவும் நூலகமாகவும் பயன்படுத்துவதற்காக அரசிடம் பொதுமக்கள் ஒப்புதல் பெற்று நிலுவையில் உள்ள நிலையில், அந்த பகுதி வருவாய் துறை அலுவலர்கள் தன்னிச்சையாக தனி நபர்களிடம் பெரும் தொகை ஒன்றை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு பட்டாப் போட்டு கொடுப்பதாக ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் அப்பகுதி பொதுமக்கள் புகார் கொடுத்துள்ளனர்.