ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள பெருநாழியில் துணை ஆட்சியரும், மாவட்ட ஆய்வுக் குழு அலுவலருமான சங்கரகாமேஸ்வரர் தலைமையில், கமுதி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவி தமிழ்செல்விபோஸ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோட்டை ராஜ், சந்திரமோகன்(கிராம ஊராட்சிகள்), கமுதி வட்டாட்சியர் காதர்முகைதீன் ஆகியோரது முன்னிலையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகம் நடைபெற்றது. இந்த முகாமில் இடிவிலகி, எம். புதுக்குளம், பெருநாழி, பொந்தம்புளி, காடமங்கலம் உள்ளிட்ட 5 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக அளித்தனர்.
இதன் அடிப்படையில் இலவச வீடு, இலவச வீட்டு மனை பட்டா, மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம், வேளாண்மை தொடர்பான விண்ணப்பங்கள் என மொத்தம் 200 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. இந்த முகாமில் ஊராட்சி தலைவர்கள் ஆறுமுகம், முருகன் மற்றும் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கமுதி துணை வட்டாட்சியர்கள், குடிநீர் வடிகால் வாரியம், மின்வாரியம், வேளாண்மைத்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.