இட ஒதுக்கீடை வலியுறுத்தி பா. ம. க வினர் ஆர்ப்பாட்டம்: -

53பார்த்தது
ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் முன்பு 10. 5 சதவீத இட ஒதுக்கீடை வலியுறுத்தி பா. ம. க வினர் ஆர்ப்பாட்டம்: -

ராமநாதபுரம் மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சி (கிழக்கு) சார்பாக மாவட்ட செயலாளர் அக்கீம் தலைமையிலும், மாநில பொதுக்குழு உறுப்பினர் சகுபர் சாதிக், மாநில செயற்குழு உறுப்பினர் சண்முகம் ஆகியோர் முன்னிலையிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத திமுக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. உடனடியாக 10. 5% இட ஒதுக்கீடை வன்னியர் இன மக்களுக்கும் ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்தி அனைத்து ஜாதியினருக்கும் தகுந்த இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற தொகுதி தலைவர் வெங்கடேசன், செயலாளர் பாலகுமார், திருவாடானை சட்டமன்ற தொகுதி செயலாளர் முனியசாமி மண்டபம் ஒன்றிய செயலாளர் மக்தும்கான் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி