நெல்லையில் கடந்த 1 ஆம் தேதி முத்துராமலிங்கத் தேவர், விவேகானந்தர் குறித்து அவதூறாக பேசி ஒரு தரப்பினர் வீடியோ வெளியிட்டனர். இதைக் கண்டித்து அவரை கைது செய்யக்கோரி ஆப்பநாடு மறவர் சங்கம் சார்பில் சுமார் 500 பேர் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தை நோக்கி பேணியாகச் சென்றனர். அப்போது மறியலில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் கைது செய்ய முயன்ற போது தள்ளு முள்ளு ஏற்பட்டது.