அமமுக ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் நியமனம்.!

65பார்த்தது
அமமுக ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் நியமனம்.!
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ராமநாதபுரம் மாவட்ட செயலாளராக முதுகுளத்தூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம். முருகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அக்கட்சியின் பொது சொயலாளர் டிடிவி. தினகரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: ராமநாதபுரம் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கிழக்கு, மேற்கு மாவட்ட செயலாளர்கள் பதவி கலைக்கப்பட்டு, ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்ட செயலாளராக முதுகுளத்தூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம். முருகன் நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் புதிதாக மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட முருகனுக்கு அக்கட்சியின் ராமநாதபுரம் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி