கமுதி வட்டாரத்தில் தமிழக முதலமைச்சரின் 2024}25 ஆம் ஆண்டுக்கான மண்ணுயிர் காத்து இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் பசுந்தாள் உரப்பயிர்களை பயிரிட விவசாயிகளுக்கு கமுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சிவராணி அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தற்போது பின்பற்றபடும் நவீன வேளாண்மையில் லாப நோக்குடன் ஒரே பயிரை தொடர்ந்து சாகுபடி செய்தல், மண்ணின் வளத்தை அதிகமாக பயன்படுத்தும் பயிர்களை பயிரிடுதல் மற்றும் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் அதிக அளவில் இராசயன உரங்கள் மற்றும் பயிர் பாதுகாப்பு மருந்துகளை பயன்படுத்துதல் ஆகியவற்றால் மண்ணில் உள்ள நுண்ணுயிர்களின் எண்ணிக்கை குறைவதோடு மண்ணின் வளமும் குன்றி, விழசாய நிலங்கள் களர் உவர் நிலங்களாக மாறி வருகின்றன. எதிர்கால சந்ததியினருக்கு வளமற்ற மலட்டு மண்ணையே விட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் பயனடைய விரும்பும் அல்லது, கூடுதல் தகவல்களை பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் வேளாண்மை துறை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என கமுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சிவராணி தெரிவித்துள்ளார்.